செல்வ விநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

கோவில்பட்டி அருகே உள்ள ஸ்ரீ வலம்புரி செல்வ விநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலை உள்ள சின்ன காலனியில் ஸ்ரீ வலம்புரி செல்வ விநாயகருக்கு குடமுழுக்கு விழா நடைபெற்றது.
சிறப்புகளுடன் கோமங்களுடன் பூஜைகள் தொடங்கினர் இன்று காலை ஆறு மணி முதல் இரண்டாம் காலம் தியாக பூஜை தொடர்ந்து ஸ்ரீ வலம்புரி செல்வ விநாயகர் கலச கோபத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
இதைத் தொடர்ந்து விநாயகர் 18 வகையான அபிஷேகங்களும் சிறப்பு பூஜை மற்றும் ஆராதனைகளும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார், அம்மா பேரவை துணை செயலாளர் நீலகண்டன், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட அம்மா பேரவை தலைவர் மாரியப்பன், கழுகுமலை நகரச் செயலாளர் முத்துராஜ்,
மாணவரணி ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன், இளைஞரணி செயலாளர் கருப்பசாமி, வர்த்தக அணி பிரிவு காமராஜ், மாரியப்பன், கரடிகுளம் கிளைச் செயலாளர் ராசு என்ற அயன்ராஜ் செட்டிகுறிச்சி கிருஷ்ணசாமி, ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், நகர மன்ற உறுப்பினர் கவியரசன், மேல ஈரால் ஒன்றிய செயலாளர் பொன்ராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி,அதிமுக நிர்வாகிகள் கோபி, முருகன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.