BREAKING NEWS

சேதமடைந்த தெரு குழாய்களுக்கு சின்ன பட்டி டிங்கரிங்க் செய்து விட்டு புதிதாக அமைக்கப்பட்டது போன்ற தோற்றத்தில் பல லட்ச ரூபாய் முறைகேடு செய்துள்ளதாக கிராம மக்கள் புகார்.

சேதமடைந்த தெரு குழாய்களுக்கு சின்ன பட்டி டிங்கரிங்க் செய்து விட்டு புதிதாக அமைக்கப்பட்டது போன்ற தோற்றத்தில் பல லட்ச ரூபாய் முறைகேடு செய்துள்ளதாக கிராம மக்கள் புகார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியம் டொம்புச்சேரி ஊராட்சிக்குட்பட்டது பத்ரகாளிபுரம் கிராமம். இங்கு சுமார் 2,500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இக்கிராமத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்க்காக 5 இடங்களில் டொம்புச்சேரி ஊராட்சியின் சார்பில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு உப்புத் தண்ணீர் தெரு குழாய்கள் சின்டெக்ஸ் டேங்க்குடன் அமைக்கப்பட்டிருந்தன.

 

இந்த சின்டெக்ஸ் டேங்குகளுடன் கூடிய தெரு குழாய்கள் சேதமடைந்து பல மாதங்கள் பயன்பாடின்றி இருந்தன.

இதையடுத்து டொம்புச்சேரி ஊராட்சியின் சார்பில் பத்ரகாளிபுரம் விநாயகர் கோவில் பின்புறம் மற்றும் சுருளி என்பவர் வீட்டின் அருகே 2 சேதமடைந்த தெரு குழாய்களை மராமத்து பணிகள் மட்டுமே செய்து விட்டு புதிய சின்டெக்ஸ் டேங்குகள் அமைத்துள்ளனர்.

 

மேலும் இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்: சேதமடைந்த தெரு குழாய்களை சின்ன சின்ன மராமத்து பணிகளை செய்து விட்டு, ஏற்கனவே இருந்த பழைய கட்டிடம், பழைய மீட்டர் பாக்ஸ் ஆகியவைகளுடன் சேர்ந்து புதிதாக சின்டெக்ஸ் டேங்க் மட்டுமே அமைத்து விட்டு, புதியதாக ஆழ்துளை கிணற்றில் மின்மோட்டார் அமைத்து குடிநீர் வசதி செய்தல் என 2 இடங்களில் இந்த சின்டெக்ஸ் டேங்க் மட்டும் அமைக்கப்பட்ட நிலையில் புதிதாக தெரு குழாய்கள் அமைக்கப்பட்டது.

 

போன்று ஒரு இடத்தில் இதற்க்கான திட்ட மதிப்பீடு 1 லட்சத்து 98 ஆயிரம் என்றும், மற்றொரு இடத்தில் 1 லட்சத்து 66 ஆயிரம் என திட்ட மதிப்பீடு போட்டு பெயர் பலகை வைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

 

இந்த தகவல் தெரிந்து கிராம மக்கள் பிரச்சனை செய்ததால் மேலும் இக்கிராமத்தில் நடக்க விருந்த 2 தெரு குழாய்களின் வேலைகளை ஊராட்சி நிர்வாகத்தினர் நிறுத்தி வைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

 

மேலும் இது குறித்து பத்ரகாளிபுரம் கிராம மக்கள் சம்பந்தப்பட்ட டொம்புச்சேரி ஊராட்சி நிர்வாகத்திடம் சென்று கேட்ட பொழுது: எவ்வித முறையான பதில் அளிக்காமல் ஊராட்சி நிர்வாகத்தினர் மெத்தன போக்குடன் நடந்து கொள்வதாகவும், இதனால் மக்களின் வரிப்பணம் அதிகளவு வீணடிக்கப்பட்டுள்ளதாகவும் இப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

 

8 ஆயிரம் ரூபாய் கூட இல்லாத சின்டெக்ஸ் டேங்க்கை மட்டும் அமைத்து விட்டு பட்டி டிங்கரிங்க் செய்து விட்டு லட்ச ரூபாய் திட்ட மதிப்பீட்டு போட்டு முறைகேடு நடந்துள்ளதாகவும், அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியதோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் தலையிட்டு இதில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை கண்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS