சேத்திரபாலபுரத்தில் புதியதாக அமைய உள்ள அரசு மதுபான கடையை தடுத்து நிறுத்துவது தொடர்பாக நான்கு கிராம மக்கள் ஒன்று சேர்ந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே சேத்திரபாலபுரம் காவிரி கரையில் மக்கள் பயன்பாட்டில் உள்ள பிரதான சாலையில் புதிதாக தொடங்க உள்ள அரசு மதுபான கடையை தடுத்து நிறுத்த கோரி சேத்திரபாலபுரம்,அரையபுரம்,கடலங்குடி தொழுதலாங்குடி ஆகிய 4 கிராம மக்கள் மற்றும் பல்வோறு கட்சிகள் சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
இக்கூட்டத்தில் அரசு மதுபாண கடையை இப்பகுதியில் திறக்க கூடாது என இரண்டு மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதை கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம் புதிய மதுபாண கடையை திறப்பதற்கான பணியை மேற்கோண்டு வருகிறது.
இதனால் அவ்வழியாக பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள், பணிக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்ட அனைவரும் பாதிக்கபடும் சூழல் உள்ளதால் புதிய மதுபாண கடையை திறக்க கூடாது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது மீண்டும் நாளை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க உள்ளதாகவும் இதையும் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாவிட்டால் அடுத்து சாலைமறியல் போராட்டம் நடத்தப்போவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
இதில் கட்சி பாகுபாடின்றி ஊராட்சி மன்ற தலைவர்கள்,அனைத்துக் கட்சி நிர்வாகிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.