BREAKING NEWS

சேலம், அக்ரஹாரம் ஊராட்சியில் செவிலியர் இல்லாததால் பூட்டிக் கிடக்கும் துணை சுகாதார நிலையம்.

சேலம், அக்ரஹாரம் ஊராட்சியில் செவிலியர் இல்லாததால் பூட்டிக் கிடக்கும் துணை சுகாதார நிலையம்.

சேலம் மாவட்டம், சன்னியாசிப்பட்டி அக்ரஹாரம் ஊராட்சிக்கு உட்பட்ட நாகிசெட்டிபட்டி, நாட்டாம்பாளையம், கொழிஞ்சி பாளையம் உள்ளிட்ட கிராம மக்கள் பயன்பாட்டிற்காக சன்னியாசிபட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே துணை சுகாதார நிலையம் உள்ளது.

அங்கு, கர்ப்பிணிகள் பரிசோதனை, தடுப்பூசி போடுதல், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைக்காக தினமும் ஏராளமானோர் சென்று வந்தனர். அங்கு பணிபுரிந்த செவிலியர் ஒருவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பணி ஓய்வு பெற்று சென்று விட்டார்.  இதனால், சங்ககிரி ஆர்எஸ் பகுதியைச் சேர்ந்த செவிலியர் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார்.

நிரந்தர செவிலியர் இல்லாததால் துணை சுகாதார நிலையம் பூட்டியே உள்ளது. இதனால் மக்கள் 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள புள்ளிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெறும் நிலை உள்ளது.

இதனால் பெண்கள் குழந்தைகள் கர்ப்பிணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே துணை சுகாதார நிலையத்தை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS