சேலம் மாவட்டம் சங்ககிரியில் சாலை விபத்து ஆறு பேர் பலி; ஓட்டுநர் கைது.
ஆந்திர பிரதேசம், மேற்கு கோதாவரி மாவட்டம், தேவாரப்பள்ளி தாலுகா, சின்னாக் கவுண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன்பாபு (25 ). ஈச்சர் லாரி டிரைவர். இவர், நேற்று முன்தினம் தனது ஈச்சர் வாகனத்தில் சேலம் பக்கம் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது நள்ளிரவு 12.15 மணிக்கு சங்ககிரி அருகே கலியனூர் பைபாஸ் என்ற இடத்தில் உள்ள ஈஸ்வரி பெட்ரோல் பங்க் முன்பு ரோட்டின் இடது புறமாக லாரி எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல், பின்னால் வரும் வாகனங்களுக்கு தெரியப்படுத்த பார்க்கிங் லைட் போடாமலும், கவனக் குறைவாகவும், அஜாக்கிரதையாகவும், நிறுத்திவிட்டு தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது சேலம் பக்கம் இருந்து அதிகாலை 2:30 மணிக்கு ஆம்னி காரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் வந்து கொண்டிருந்தபோது லாரியின் பின்பக்கம் போதே விபத்துக்குள்ளானது. உடனே தூங்கிக் கொண்டிருந்த லாரி டிரைவர் ஜெகன் பாபு எழுந்து பார்த்து அங்கிருந்து லாரியை எடுத்துக்கொண்டு நிற்காமல் கோவை நோக்கி சென்று விட்டார்.
இந்த விபத்தில் ஆறு பேர் பலியாகினர் இரண்டு பேர் கவலைக்கிடமாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து சேலம் மாவட்ட எஸ்பி அருண் கபிலன் நேரில் ஆய்வு செய்து லாரி டிரைவரை பிடிக்க உத்தரவிட்டார்.
அதன் பெயரில் சங்ககிரி டிஎஸ்பி ராஜா மேற்பார்வையில் சங்ககிரி எஸ்ஐ பழனிச்சாமி வழக்குப்பதிந்து கோவை கோவை அருகே சாய்பாபா காலனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எம்ஜிஆர் மார்க்கெட் பகுதியில் சென்று கொண்டிருந்த ஜெகன் பாபு ஓட்டிச் சென்ற ஈச்சர் லாரியை படைக்க பிடித்து லாரியை பறிமுதல் செய்து சங்ககிரி காவல் நிலையம் கொண்டு வந்து நிறுத்தினர்.
அதனை தொடர்ந்து ஜெகன் பாபு (25), கைது செய்து அஜாக்கிரதையாகவும், கவனக் குறைவாகவும் இந்த செயலால் உயிரிழப்பு ஏற்படுத்துவது 279, 304(A), ஆகிய இந்திய தண்டனைச் சட்டத்திலும், சாலையில் விபத்து ஏற்படுத்த நோக்கத்தில் நிறுத்தி வைப்பது விபத்து ஏற்பட்ட பிறகு காயம் பட்டவர்களை உதவி செய்யாமல் வாகனத்தை எடுத்துச் செல்வது 122 R/W 177, 134 R/W 177 ஆகிய மோட்டார் வாகன சட்டத்திலும் ஆகிய நான்கு பிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து நேற்று இரவு சங்ககிரியில் தேசிய நெடுஞ்சாலையில் சாலைகளில் பாதுகாப்பற்ற நிலையில் நிறுத்திய 100 வாகனங்கள் மீது போலீசார் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் சாலை ஓரங்களில் பாதுகாப்பு பெற்ற நிலையில் வாகனங்கள் நிறுத்துவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎஸ்பி ராஜா தெரிவித்துள்ளார்.