சேலம் மாவட்டம் வாழப்பாடியில் எப்போது உழவர் சந்தை அமைக்கப்படும் என பொதுமக்களும் விவசாயிகளும் கேள்வி.

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் விவசாய விவசாயிகளுக்கு உழவர் சந்தை அமைப்பதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்த நிலையில் ஒரு சிலர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனைத் தவிர்த்து தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு உழவர் சந்தையை வாழப்பாடியில் அமைத்து தர விவசாய மாநில சங்க செயலாளர் கோபாலகிருஷ்ணன் வாழப்பாடியில் அரசுக்கு சொந்தமான காலியாக உள்ள நிலத்தினை பார்வையிட்டார்.
வாழப்பாடி உழவர் சந்தை அமைப்பதற்காக பல ஆண்டுகள் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் பயனளிக்காமல் போனது இதனால் வேதனை அடைந்த விவசாயிகள் துரித காலத்தில் நடவடிக்கை மேற்கொண்டு உழவர் சந்தை அமைத்து தராவிட்டால் வாழப்பாடி பகுதி விவசாயிகள் ஒன்று சேர்ந்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை இட போவதாக தெரிவித்தார்.
CATEGORIES சேலம்
TAGS உழவர் சந்தைசேலம் மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்வாழப்பாடிவாழப்பாடி உழவர் சந்தை