சைல்டு லைன் சார்பில் குழந்தைகள் தேவைகள் குறித்து திறந்தவெளி கருத்துக்கேட்பு கூட்டம்.

செய்தியாளர் வி.ராஜா.
சிவகங்கை ஒன்றியம் குடஞ்சாடி ஊராட்சி உருளியில் சைல்டு லைன் சார்பில் குழந்தைகள் தேவைகள் குறித்து திறந்தவெளி கருத்துக்கேட்பு கூட்டம் குடஞ்சாடி ஊராட்சி மன்ற தலைவர் மீனாள் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து சிப்காட் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் சுரேஷ்குமார், சைல்டு லைன் செயல்பாடுகள் குறித்து சைல்டு லைன் உறுப்பினர் அர்ச்சனா, பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து ஒருங்கிணைந்த சேவை மையபணியாளர் ரெவினியா, போதைப்பொருட்களின் தீமைகள் குறித்து பயிற்சி சார்பு ஆய்வாளர் ராஜேஷ், குழந்தைகளின் முன்பருவ கல்வியின் அவசியம் குறித்து அங்கன்வாடி மையப்பொறுப்பாளர் தனலெட்சுமி,
குழந்தைகளுக்கான அரசு திட்டங்கள் குறித்து கிராம நிர்வாக அலுவலர் தங்கராஜ், முதியோர் உதவி எண் செயல்பாடுகள் குறித்து முதியோர் உதவி எண் ஒருங்கிணைப்பாளர் உதயா, சுகாதாரம் குறித்து கிராம செவிலியர் வீரநந்தினி, குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து சைல்டு லைன் உறுப்பினர் முகேஷ் கண்ணன் ஆகியோர் கருத்துரையாற்றினார்கள்.
இதில் சைல்டு லைன் உறுப்பினர்கள் சிவசங்கரி, பிர்லா, ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர் சங்கரஅபர்ணா, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் சாந்தா, குப்புமகேஷ்வரி, பள்ளி மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பள்ளியில் சைல்டு லைன் செயல்பாடுகள் குறித்து சுவர்விளம்பரம் திறந்துவைக்கப்பட்டது.