சொத்து வரி கட்டுங்க..தவறினால் கட்டிடங்களுக்கு சீல் தான்” – சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை !

சொத்து வரி கட்டுங்க..தவறினால் கட்டிடங்களுக்கு சீல் தான்” – சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை !
Chennai Corporation : நீண்ட நாட்களாக வரி செலுத்த தவறும் சொத்து உரிமையாளர்களின் சொத்தினை சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டத்தின்படி ஜப்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சியின் வரி வருவாயில் சொத்து வரி முக்கிய வருவாய் ஆக உள்ளது. இந்நிலையில், அதிக வரி பாக்கி உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இதன்படி, சமீப காலமாக அதிக சொத்து வரி நிலுவையில் கட்டிடங்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை மேலும் தொடர ரூ.10 லட்சத்திற்கு அதிகமாக சொத்து வரி பாக்கி உள்ளவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி தயார் செய்தது.
இந்த நடவடிக்கையின் காரணமாக சொத்து வரியினை நீண்ட நாட்களாக செலுத்தாத நிறுவனங்கள் தங்களது சொத்து வரி நிலுவையினை செலுத்தியுள்ளனர். இதன் காரணமாக கடந்த 15 நாட்களின் ரூ.40 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 2022 முதல் நடப்பு ஆண்டில் இதுவரை ரூ. 220.64 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது.நீண்ட நாட்களாக சொத்து வரி செலுத்தாத வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் மீது ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
