சோளிங்கர் அடுத்த கிருஷ்ணாவரம் ஏவிடி நகரில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜைநடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கிருஷ்ணாவரம் ஏவிடி நகர் பகுதியில் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 3 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சோளிங்கர் திமுக மூத்த முன்னாள் ஒன்றிய செயலாளர் மாணிக்கம் தலைமை தாங்கினார்.
நகர செயற்குழு உறுப்பினர் அறிவழகன் முன்னிலை வகித்தார் .இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம். முனிரத்தினம் கலந்து கொண்டு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 3 லட்சம் மதிப்பீட்டில் 60 மீட்டர் நீளமும், 10 அடி அகலமும் கொண்ட சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பட்டறைமணி, கோபால், செந்தில் மற்றும் பலர் உடனிருந்தனர்.
CATEGORIES ராணிபேட்டை
TAGS அரசியல்சோளிங்கர்சோளிங்கர் சட்டமன்ற தொகுதிதமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்ராணிப்பேட்டை மாவட்டம்வறுகால் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி