சோளிங்கர் அருகே முத்துமாரியம்மன் கோயிலில் கூழ் வார்க்கும் திருவிழா.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ஐப்பேடு கிராமத்தில் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் கூழ் வார்க்கும் திருவிழா நேற்று நடந்தது.
இதையொட்டி மங்கள வாத்தியங்களுடன 108 பால்குடங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று முத்துமாரியம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் ஊர் முக்கிய வீதிகளில் வழியாக 108 கூழ் குடங்களை ஊர்வலமாக எடுத்துச்சென்று கோவில் வளாகத்தில் கூழ் ஊற்றி முத்து மாரியம்மனை வழிபாடு செய்தனர். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பெண்கள் பொங்கல் வைத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வழிப்பட்டனர்.
இதில் ஒன்றிய குழு உறுப்பினர் சாவித்திரிபெருமாள், பாஸ்கர், சுப்பிரமணி, கிருஷ்ணன், ராமலிங்கம், வெங்கடேசன், நரசிம்மன்,கருணா,எம்.வெங்கடேசன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
CATEGORIES ஆன்மிகம்
TAGS ஆன்மிகம்ஐப்பேடு கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் கூழ் வார்க்கும் திருவிழாசோளிங்கர்சோளிங்கர் ஐப்பேடு கிராமம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்ராணிபேட்டைராணிபேட்டை மாவட்டம்