BREAKING NEWS

சோளிங்கர் பஸ் நிலையம் அருகே உள்ள மசூதியில் ரமலான் திருநாளை சிறப்பு தொழுகை நடத்தினர்.

சோளிங்கர் பஸ் நிலையம் அருகே உள்ள மசூதியில் ரமலான் திருநாளை சிறப்பு தொழுகை நடத்தினர்.

இஸ்லாமியர்களின் ஐந்து முக்கிய கடமைகளில் ஒன்றான ரமலான் மாதம் நோன்பின் இறுதி நாளில் குடும்பத்தார், உறவினர்கள் சூழ , ஏழை எளியோருக்கு கொடை வழங்கி ரமலான் திருநாளை இஸ்லாமியர்கள் கொண்டாடுவது வழக்கம்.

 

இன்று ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் இஸ்லாமியர்களால் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

 

 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்களில் இஸ்லாமியர்கள் ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக இஸ்லாமியர்கள் ஊர்வலமாக சென்று சோளிங்கர் பஸ் நிலையம் அருகே உள்ள மசூதியில் இன்று காலை நடைபெற்ற ரமலான் சிறப்பு தொழுகையில் 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்று மனமுருகி தொழுகையில் ஈடுபட்டனர்.

 

அதனைத் தொடர்ந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடிய இஸ்லாமியர்கள் ஒருவரையொருவர் ஆரத்தழுவி ரமலான் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர். இதனை தொடர்ந்து சோளிங்கர் காவல் நிலையம் சார்பில் எஸ்ஐ மோகன்ராஜ் மற்றும் போலீசார் இஸ்லாமிய குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இனிப்புகள் வழங்கி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

 

CATEGORIES
TAGS