BREAKING NEWS

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா../!

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா../!

ராணிபேட்டை மாவட்டம்; பிரசித்தி பெற்ற சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

 

தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத பக்தோசித பெருமாள் வீதி உலா வந்து அருள் பாலிக்கிறார். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே மாதம் 2 ம் தேதி நடைபெறுகிறது.

 

 

இந்நிலையில் பிரம்மோற்சவத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் சோளிங்கர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் நேற்று நடந்தது. திருவிழாவில் செயின் பறிப்பு உள்ளிட்ட திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க விழிப்புடன் செயல்பட வேண்டும் என போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது.

 

மேலும் தேரோட்டத்தின் போது 100 க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தபட உள்ளதாகவும் கண்காணிப்பு கேமராக்கள், ட்ரோன் மூலமும், பக்தர்களை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தெரிவித்தார். இதில் எஸ்ஐ மோகன்ராஜ் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS