BREAKING NEWS

சோழபுரம் நகர அதிமுக சார்பில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்.

சோழபுரம் நகர அதிமுக சார்பில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்.

தஞ்சாவூர்,

அதிமுக சார்பில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் ஒன்றிய கழக செயலாளர் சோழபுரம் அறிவழகன் தலைமையில் நடைபெற்றது.

 

திருப்பனந்தாள் அருகே சோழபுரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார், 100க்கும் மேற்பட்ட அதிமுகவின் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள்,
பூத் கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்றனர். சோழபுரம் பேரூராட்சியில் 7 பூத்துகள் 70 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

 

முன்னதாக பல்வேறு கட்சியில் இருந்து விலகி அதிமுக ஒன்றிய செயலாளர் சோழபுரம் அறிவழகன் தலைமையில் அதிமுகவில் இணைந்து கொண்டனர்.

 

நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய செயலாளர் அழகு.த. சின்னையன், அதிமுக நிர்வாகிகள் சேகர், ராஜாரமேஷ், உலகநாதன், ராஜேந்திரன், சண்முகம், சின்னதுரை, மற்றும் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சோழபுரம் நகர செயலாளர் எம். இஸட்.ஆசாத் அலி செய்திருந்தார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )