BREAKING NEWS

ஜெயங்கொண்டம் அரசு கல்லூரி மாணவர்களின் நாட்டு நலப்பணித்திட்டம் முகாம் நிறைவு விழா

ஜெயங்கொண்டம் அரசு கல்லூரி மாணவர்களின் நாட்டு நலப்பணித்திட்டம் முகாம் நிறைவு விழா

ஜெயங்கொண்டம் அரசு கல்லூரி மாணவர்களின் நாட்டு நலப்பணித்திட்டம் முகாம் நிறைவு விழா

ஜெயங்கொண்டம் மார்ச்

ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் முகாம் இலையூர் கிராமத்தில் துவக்க விழா கடந்த 11ம் தேதி நடைபெற்றது. முகாமை முன்னிட்டு நாட்டு நலப்பணித் திட்டம் மாணவ மாணவிகள் இலையூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் செல்லி அம்மன் கோவில்கள் மற்றும் சிவன் கோவில் பெருமாள் கோவில் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் உழவாரப் பணிகள் மேற்கொண்டு தூய்மை செய்தனர். வேளாண்மை துறை காவல் துறை சுகாதாரத்துறை தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறைகள் மூலம் விழிப்புணர்வு பேரணி, கருத்தரங்கங்கள் நடைபெற்றன.

முகாமின் நிறைவு
விழாவிற்கு கல்லூரி முதல்வர் ரமேஷ் தலைமை வகித்தார். விழாவில் இலையூர் ஊராட்சி மன்ற தலைவர் தங்கம் அறிவழகன், துணைத்தலைவர் பாலுசாமி, இலையூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சரவணகுமார், கணித பட்டதாரி ஆசிரியர் ரங்கநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமி பிரபா சிறப்புரையாற்றினார். முன்னதாக முனைவர் இணை பேராசிரியர் ராஜமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். இறுதியில் நாட்டு நலப்பணித் திட்ட அலகு-2. உதவி பேராசிரியர் பவானி நன்றி கூறினார்.
செய்தியாளர் D . வேல்முருகன்

Share this…

CATEGORIES
TAGS