ஜெயங்கொண்டம் அருகே செங்குந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரோட்டரி சங்கம், பிரபு பல் மருத்துவமனை இணைந்து இலவச பல் மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது.

இலவச பல் மருத்துவ முகாம்
ஜெயங்கொண்டம் அருகே செங்குந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரோட்டரி சங்கம், பிரபு பல் மருத்துவமனை இணைந்து இலவச பல் மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது.
முகாமிற்கு வாகை ஆண்டின் துணை ஆளுநர் செந்தில்வேல் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் வேல்மணி முன்னிலை வகித்தார். ஜெயங்கொண்டம் காவல் உதவி ஆய்வாளர் நந்தகோபால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். டாக்டர் பாபு, உமா மகேஸ்வரி, ராஜபிரியா ஆகியோர் முகாமில் பங்கேற்றவர்களுக்கு பல் சீரமைப்பு, சிகிச்சை குறித்த பரிசோதனைகள், சிகிச்சை அளிக்கப்பட்டது. ரோட்டரி சங்க நிர்வாகிகள் விஜயகுமார், தலைவர் சுரேஷ் குமார், செயலாளர் முருகன், பொருளாளர் கார்த்திகேயன்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் D. வேல்முருகன்.
CATEGORIES அரியலூர்
TAGS அரியலூர் மாவட்டம்இலவச பல் மருத்துவ முகாம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தொடக்கப்பள்ளியில் ரோட்டரி சங்கம்மாவட்ட செய்திகள்முக்கிய செய்திகள்