BREAKING NEWS

ஜெயங்கொண்டம் அருகே தமிழக அரசின் சார்பில் வருமுன் காப்போம் திட்டம்- எம் எல் ஏ துவக்கி வைத்தார்

ஜெயங்கொண்டம் அருகே தமிழக அரசின் சார்பில் வருமுன் காப்போம் திட்டம்- எம் எல் ஏ துவக்கி வைத்தார்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அடுத்த பொற்பதிந்தநல்லூர் ஊராட்சியில் தமிழக அரசின் சார்பில் வருமுன் காப்போம் திட்ட மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமினை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவர்கள் துவங்கி வைத்தார்.

இதில் வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமிர்தலிங்கம்(வட்டார ஊராட்சி), விஸ்வநாதன்(கிராம ஊராட்சி), ஊராட்சி மன்ற தலைவர் சத்தியராஜ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மலர்க்கண்ணன்,

கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமார், தலைமை ஆசிரியர் ஜோதிலெட்சுமி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜ், ஊராட்சி செயலாளர் அசோக் மற்றும் மருத்துவ அலுவலர்கள் , செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS