ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு திருவண்ணாமலை எம்பி கடிதம்.

சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூர் வரை வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி நாளை துவங்கி வைக்க உள்ளார். அதன் காரணமாக சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு செல்லும் முக்கிய 3 ரயில்வே நிலையங்களான சேலம், ஈரோடு, திருப்பூர், ஆகிய ரயில்வே நிலையங்களில் மட்டுமே நின்று செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சிஎன் அண்ணாதுரை மத்திய ரயில்வே துறை அமைச்சர் ஸ்ரீ அஸ்வினி வைஷ்ணவ் அவருக்கு கடிதம் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார் அந்த கடிதத்தில் இந்தியாவிலேயே ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் மிகவும் முக்கிய பங்கு வகித்தது.

மேலும் ஜோலார்பேட்டை அருகே ஏலகிரி மலை சுற்றுலா தளமாகவும் விளங்கி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏலகிரி மலைக்கு சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
எனவே ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் வந்தே பாரத் ரயில் நிற்க வழிவகை செய்ய வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
