BREAKING NEWS

டாக்டர் அப்துல் கலாம் விருதுக்கு தகுதியுடையோர் ஜூன் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்; தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

டாக்டர் அப்துல் கலாம் விருதுக்கு தகுதியுடையோர் ஜூன் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்; தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

டாக்டர் அப்துல் கலாம் விருதுக்கு தகுதியுடையோர் ஜூன் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு சார்பில் ஆண்டு தோறும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இந்த விருதுக்கு தகுதியுடையவர்கள் ஆவர். இந்நிலையில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அப்துல் கலாம் விருதுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையோர் தங்களின் சுயவிவரக் குறிப்புடன் https://awards.tn.gov.in இணையதளத்தில் ஜூன் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல், மாணவர் நலன் சார்ந்த துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருதை, ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் வழங்கி வருகிறார்.

இந்த ஆண்டுக்கான விருதுடன் ரூ.5 லட்சத்துக்கான காசோலையும், 8 கிராம் தங்கத்திலான பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படும். விருதுக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதியான நபரை, தேர்வுக் குழு தேர்ந்தெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )