BREAKING NEWS

டாக்டர்.அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி, பொது இடத்தில் சுவர் எழுப்பி படம் வரைய அனுமதி கேட்டு ஊர் மக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு.

டாக்டர்.அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி, பொது இடத்தில் சுவர் எழுப்பி படம் வரைய அனுமதி கேட்டு ஊர் மக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு.

வேலூர் மாநகராட்சிகுட்பட்ட விருபாட்சிபுரம் பகுதியில் அண்ணாவீதி, காந்திநகர், சகநகர், பாறைமேடு உள்ளிட்ட பகுதிகளிலில் வசிக்கும் மக்கள் அங்குள்ள பொது இடத்தில் டாக்டர்.அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு புதியதாக சுவர் எழுப்பி அதில் டாக்டர்.அம்பேத்கர் படம் வரைய இருந்த நிலையில்,

 

 

அதற்க்கு வேலூர் வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் தடுத்து நிறுத்துவதாகவும். இது எங்களின் அடையாளத்தை வெளிப்படுத்த அனைத்து தரப்பு மக்களின் ஒத்துழைப்போடு எடுக்கப்பட்ட முடிவு என்றும்.

 

 

இதனை தடுக்கும் வேலூர் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அதே இடத்தில் டாக்டர்.அம்பேத்கர் படம் வரைய அனுமதிக்க வேண்டும் எனை கூறி விருபாட்சிபுரம் பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் என பெண்கள் உட்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி இடம் மனு அளித்தனர்.

CATEGORIES
TAGS