டியூஷன் சென்று வீடு திரும்பும்போது இருசக்கர வாகனம் மோதி பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.
விபத்தை ஏற்படுத்திய இளைஞரும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வெங்கடேசபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி இவரது மகன் தனுஷ் (17) அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று (01.09.2023) இரவு 9:30 மணி அளவில் டியூஷன் முடித்து வீட்டிற்கு திருபும் போது காட்பாடி குடியாத்தம் நெடுஞ்சாலையை கடந்துள்ளார்.
அப்போது காட்பாடியில் இருந்து குடியாத்தம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த எல்.ஜி. புதூர் பகுதியை சேர்ந்த கதிரவன் (19) என்ற இளைஞர் எதிர்பாராத விதமாக மாணவன் தனுஷ் மீது மோதியதில் பள்ளி மாணவன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பலத்த படுகாயம் அடைந்த கதிரவனை மீட்டர் காவல்துறையினர் சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆங்கு சிகிச்சை பெற்று வந்த இளைஞர் கதிரவன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் இருவர் உயிரிழந்தது தொடர்பாக காட்பாடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.