டி.டி.வி. தினகரன் உடல் நிலை குறித்துt மருத்துவர் பேட்டி.

தஞ்சாவூர்,
டி.டி.வி. தினகரன் உடல் நிலை குறித்துt மருத்துவர் பேட்டி
உணவு ஒவ்வாமை காரணமாக தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நலமுடன் இருக்கிறார் மருத்துவர் பிரசன்னா பேட்டி :

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது உடல் நலம் குறித்து அவருக்கு சிசிச்சை அளித்து வரும் குடல். ஈரல் நோய் மருத்துவ நிபுணர் டாக்டர்.பிரசன்னா கூறும்போது.
வயிற்றுவலி. வாந்தி, வயிற்றுப்போக்குடன் மருத்துவமனைக்கு வந்த தினகரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்ட அவர் தற்போது நலமுடன் உள்ளார். பொது வார்டில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இரண்டு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என கூறினார்.
மருத்துவமனை சார்பில் மருத்துவ அறிக்கையும் வெளியிட்டுள்ளது.
