டி.பண்டாரவாடை தாருன் நஈம் பள்ளிவாசலில் 74 வது இந்திய குடியரசு தின விழா கொடியேற்றத்துடன் கொண்டாடப்பட்டது.
செய்தியாளர் தாரிக்கனி.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா T. பண்டாரவாடை தாருன் நஈம் பள்ளிவாசலில் 74 வது இந்திய குடியரசு தின விழா கொடியேற்றத்துடன் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக குத்தாலம் காவல் ஆய்வாளர் அமுதாராணி தேசிய கொடியை ஏற்றி வைத்து மதரஸாவில் பயின்று வரும் மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியானது ஊர் முத்தவல்லி செல்லப்பா தலைமையில் நடந்தது இதில் ஊர் நிர்வாகிகள் அமீர், நஜிமுல்லா, முன்னாள் கவுன்சிலர் ஜெஹபர் அலி,
காங்கிரஸ் மாவட்ட பொது செயலாளர் ரியாத் அஹமது.திமுக ஒன்றிய துணை செயலாளர் LDC செந்தில்.மரிய ஆரோக்கியராஜ்.அசோக் குமார்.வார்டு உறுப்பினர் கண்ணன், அன்வர், Dr.அப்துர் ரஹ்மான், வார்டு உறுப்பினர் அனிதா சிவதாஸ் மற்றும் ஊர் மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி இறுதியில் அப்துர் ரஹ்மான் தாருன் நாஃம் பள்ளி இமாம் நன்றியுரையாற்றி நிறைவு செய்தார்.