BREAKING NEWS

டேனிஷ் கோட்டையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஓசோன் செறிவு மண்டல விழிப்புணர்வு நிகழ்ச்சி.

டேனிஷ் கோட்டையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஓசோன் செறிவு மண்டல விழிப்புணர்வு நிகழ்ச்சி.

 

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா டேனிஷ் கோட்டையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஓசோன் செறிவு மண்டல விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மகாபாரதி பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன் ஆகியோர் கலந்துகொண்டு ராட்சத பலூன்களை பறக்க விட்டனர்.

 

ஓசோன் செறிவு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி பேசியதாவது.

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டு சுற்றுலா தளங்கள் உள்ளன ஒன்று பூம்புகார் சுற்றுலா தளம் மற்றொன்று தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை ஆகும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சீரிய முயற்சியினால் பூம்புகார் சுற்றுலா தளம்24 கோடி செலவில் பூம்புகார் சுற்றுலா தளம் மேம்படுத்து பணி நடைபெற்று வருகிறது.

 

அதேபோல தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை மேம்படுத்து பணி மிக விரைவில் தொடங்கப்படும். தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை சுற்றுலா தளம் டேனியர்கள் கட்டிய பழமை வாய்ந்த கோட்டையாகும். தற்போது அருங்காட்சியமாக உள்ளது.

 

மேலும் இங்கே கடற்கரையில் ஓசோன் காற்று அதிகம் வீசப்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இத்தகைய தரங்கம்பாடி சுற்றுலா தளத்தை பிரபலப்படுத்தும் விதமாக இன்றைய தினம் ஓசோன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

 

தரங்கம்பாடி கடற்கரையில் ஓசோன் காற்று வீசுகிறது. இந்தியாவில் ஓசோன் காற்று அதிகமாக வீசப்படும் கடற்கரையாக தரங்கம்பாடி கடற்கரை திகழ்கிறது. ஏப்ரல், மே ஜூன், ஜூலை மாதங்களில் அதிகமாக காற்று வீசுகிறது.

இக்காற்று ஒரு வித நறுமணமும் குளிர்ச்சியாக ஈரப்பததுடன் இருக்கும் காற்று இந்த ஓசோன் காற்றே சுவாசித்தால் நல்ல மருந்தாகவும் உடல் நலம் ஆரோக்கியத்திடம் இருப்பதாகவும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். சுற்றுலா பயணிகள் ஓசோன் காற்றை சுவாசிப்பதற்காக தரங்கம்பாடி கடற்கரைக்கு அதிகமாக வருகை புரிகின்றனர்.

 

 

இதனை சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் தெரியும் பொருட்டு இன்றைய தினம் ஓசோன் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக ராட்சத பலூன்கள் பறக்க விடப்பட்டன. இயற்கை உருவாக்க மரக்கன்றுகள் நடப்பட்டன. இங்கு உள்ள கழிப்பிடம் நவீன கழிப்பிடமாக மாற்றப்படும்.

 

தரங்கம்பாடி பேரூராட்சி தூய்மையான பேரூராட்சியாகசெயல் படுகிறது. இங்கு உள்ள தூய்மை பணியாளர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர்.இங்கு 1306 இல் சிவன் கோயில் கட்டப்பட்டுள்ளது.

 

 

நாயக்கர் மகால் உள்ளது. கடற்கரை போல தரங்கம்பாடி கடற்கரை இயந்திரம் மூலம் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இதன் மூலம் சுற்றியுள்ள குப்பைகளை அகற்றலாம். ஓசோன் என்பது ஆக்சிஜனின் மூலக்கூராகும். தூய்மை பண்ணி மேற்கொள்ள பொது மக்களின் ஒத்துழைப்பும் அவசியமான ஒன்றாகும்.

 

சுற்றுலா பயணிகள் இங்கு அதிகமாக வந்து செல்வதற்கு உண்டான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். 

 

 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த் குமார், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மாதவன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் ராஜேஷ், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி, செம்பனார்கோயில் ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர்கள் எம்.அப்துல் மாலிக், அமுர்த.விஜயகுமார்,

 

தரங்கை பேரூர் திமுக செயலாளர் முத்துராஜா, மணல்மேடு பேரூராட்சி தலைவர் கண்மணி, குத்தாலம் பேரூராட்சிதலைவர் சங்கீதா, தரங்கம்பாடி பேரூராட்சி துணைத்தலைவர் பொன்.ராஜேந்திரன், தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் கமலக்கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS