டைமிங் பிரச்சனையில் தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் பேருந்தின் மீது மற்றொரு பேருந்து மோதி விபத்து.

டைமிங் பிரச்சனையில் தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் ‘ நின்று இருந்த தனியார் பேருந்தின் மீது மற்றொரு தனியார் . பேருந்து ஓட்டுனர் பின்புறமாக ஓட்டி மோதி விபத்தை ஏற்படுத்திய வீடியோ சமுக வலைதளங்களில் பரவியதை அடுத்து.
மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் இரண்டு பேருந்துகளையும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து பி.எல் ஏ என்ற தனியார் பேருந்தும், VPR என்ற தனியார் பேருந்தும் ஒரே நேரத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு தஞ்சை புறப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றுவதில் இரண்டு பேருந்து ஓட்டுனருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரத்தநாடு பேருந்து நிலையம் வந்தபோது PLA பேருந்து ஒட்டுனர் VPR பேருந்தை வழி மறித்து சாலை குறுக்கே பயணிகளோடு பேருந்தை நிறுத்தி உள்ளார். இதனால் இரண்டு பேருந்து ஓட்டுனர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து இரண்டு பேருந்ககளும் தஞ்சை புதிய பேருந்து நிலையம் வந்தது.
பயணிகளை இறக்கி விட்டு நின்று இருந்த PLA பேருந்தின் மீது VPR பேருந்து ஒட்டுனர் ரிவர்ஸ் எடுத்து மோதினார். இந்த காட்சி சமுக வலை தளங்களில் வைரலானதை பார்த்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இரண்டு பேருந்துகளையும் பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனை அடுத்து இரண்டு பேருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டன. இரண்டு பேருந்து ஒட்டுனர்கள் மீது இரண்டு பிரிவுகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு இரண்டு பேரும் இன்று ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.