BREAKING NEWS

தஞ்சாவூரில் அன்னதான குழு சார்பில் கட்டணம் இல்லா பொது மருத்துவ முகாமினை மேயர் ராமநாதன் தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூரில் அன்னதான குழு சார்பில் கட்டணம் இல்லா பொது மருத்துவ முகாமினை மேயர் ராமநாதன் தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூரில் அன்னதான குழு சார்பில் கட்டணம் இல்லா பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அன்னதான குழு தலைவர் உமர்முக்தர் தலைமையில் மருத்துவ முகாமை தஞ்சை மாநகராட்சி மேயர் ராமநாதன் துவக்கி வைத்தார்‌.

 

 

இந்த முகாமில் சர்க்கரை நோய் கண்டறிதல் ,ரத்த பரிசோதனை, பொது மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், இதய மருத்துவம், போன்றவைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் உணவு முறை ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

 

 

காது, மூக்கு,  தொண்டை அறுவை சிகிச்சை உதவி பேராசிரியர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவர் அமிர்தகனி, நுரையீரல் சிறப்பு மருத்துவர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, டாக்டர் ரங்கசாமி ரவீந்திரன் ஆகியோர் முகாம்களில் கலந்து கொண்ட பொதுமக்களை மருத்துவ பரிசோதனை செய்தனர்.

 

 

 

இம்முகாமில் ஏராளமான ஆண்கள், பெண்கள், மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

 

CATEGORIES
TAGS