தஞ்சாவூரில் நேரு உடையணிந்து காவல்துறையினருடன் இணைந்து தேசியக்கொடி வழங்கிய பள்ளி மாணவன்.

இந்திய நாட்டின் 75 ஆவது சுதந்திர தின பவள விழாவினை உற்சாகமாக கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி பறக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் தஞ்சாவூரில் பள்ளி மாணவன் நேரு போல் உடை அணிந்து காவல்துறை டவுன் டிஎஸ்பி ராஜா தலைமையில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு தேசிய கொடியினை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் சந்திரா தன்னார்வ தொண்டு நிறுவனச் செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
CATEGORIES தஞ்சாவூர்
