தஞ்சாவூரில் மருத்துவ குணம் நிறைந்த தேங்காய்பூ வியாபாரம்.
தஞ்சாவூர் மருத்துவ குணம் நிறைந்த தேங்காய் பூ வியாபாரம் தஞ்சாவூரில் கடந்த இரு நாட்களாக நடைபெறுவதால், பொதுமக்கள் பலரும் அதனை வாங்கிச் செல்கின்றனர்.
ஆந்திர மாநிலம் கோதவரி மாவட்டத்தில் விளையும் தேங்காயை பக்குவப்படுத்தி, அதனை முளைவிடும் தருணத்தில் எடுத்தால் தேங்காய் பூ இருக்கும்.
இந்த தேங்காய் பூவை பொதுமக்கள் பலரும் விரும்பி சாப்பிடுவதுண்டு. இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த மஞ்சுநாதன், ஜெயக்குமார் ஆகிய இருவரும் சுமார் 6 ஆயிரம் தேங்காய்களுடன் தஞ்சாவூருக்கு இரு தினங்களுக்கு முன்பு வந்தனர்.
தஞ்சாவூரில் சச்சிதானந்த மூப்பனார் சாலையில் சாலையோரமாக தேங்காய் பூ விற்பனையை தொடங்கினர். இதனை பொதுமக்கள் பலரும் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். இதுகுறித்து தேங்காய் பூ வியாபாரிகள் கூறுகையில், இந்த தேங்காய் பூவை வெறு வயிற்றில் சாப்பிட்டால் வயிற்று புண், வயிற்று வலி, மலச்சிக்கல், தைராய்டு, பெண்களுக்கான மாதவிடாய் கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
இந்த தேங்காய் பூவை நாங்கள் ஆந்திராவிலிருந்து வாங்கி வந்து இங்கு விற்பனை செய்கிறோம். பொதுமக்கள் அதிக அளவில் தேடி வந்து வாங்கிச் செல்கின்றனர் என்றனர்.
படவிளக்கம்: தஞ்சாவூரில் மருத்துவ குணம் நிறைந்த தேங்காய் பூ வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்.
CATEGORIES தஞ்சாவூர்