BREAKING NEWS

தஞ்சாவூரில் 400 ஆண்டுகளை கடந்த பீரங்கி, புதுபொலிவு பெறும் பீரங்கி மேடு, உலகில் ஐந்தாமிடத்தில் இடம் வகிக்கும் ராஜகோபால பீரங்கி.

தஞ்சாவூரில் 400 ஆண்டுகளை கடந்த பீரங்கி, புதுபொலிவு பெறும் பீரங்கி மேடு, உலகில் ஐந்தாமிடத்தில் இடம் வகிக்கும் ராஜகோபால பீரங்கி.

தஞ்சாவூரில் மன்னர்கள் காலத்தில் பயன்படுத்திய பீரங்கி பழமை மாறாமல் கீழ அலங்கம் பகுதியில் 400 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது, பீரங்கி உள்ள இடத்திற்கு பெயர் பீரங்கி மேடு என அழைக்கப்படுகிறது.

 

இந்த பீரங்கி மேட்டின் சிதைந்து போன மதில் சுவர்கள் சீரமைக்கப்பட்டு புது பொலிவுடன் தற்போது காட்சியளிக்கிறது, தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இது உள்ளது, தஞ்சையை ஆட்சி செய்த ரகுநாத நாயக்கர் மன்னர் காலத்தில் இருந்த இந்த பீரங்கி கடும் வெயில் மழையிலும் துருப்பிடிக்காமல் இன்றும் பழமை மாறாமல் காட்சியளிக்கிறது.

 

 

இந்த பீரங்கிக்கு ராஜகோபால பீரங்கி என்ற பெயரும் உண்டு, மன்னர் தான் வணங்கும் தெய்வமான மன்னார்குடி ராஜகோபால சுவாமி பெயரை தனது நாட்டை காக்க உருவாக்கப் பெற்ற பீரங்கிக்கு இந்த பெயரை வைத்துள்ளார்.

 

பீரங்கி என்றாலே குழாய்களை அச்சில் வார்த்தெடுப்பதுதான் வழக்கம், ஆனால் இந்த பீரங்கி அந்த ரகம் அல்ல, அதிக கணமுடைய 26 அடி நீளமுள்ள மூன்று அல்லது நான்கு விரல்கள் அகலமுள்ள 39 தேனிரும்பு பட்டைகளை பழுக்க காய்ச்சி ஒன்றோடு ஒன்று ஒட்டவைத்து உருளை வடிவில் உருவாக்கி இருக்கிறார்கள்.

 

26 அடி நீளத்தை கடந்தும் நீளும் இரும்பு பட்டைகளை பீரங்கி வாயின் வெளிப்புறமாக மடக்கி விட்டுள்ளனர், பீரங்கி குழாயின் மேல் ஐந்து இடங்களில் இணைப்பு வளையங்களையும் பொருத்தியுள்ளனர், பீரங்கி குழாயின் பின்புறம் அழகுற செய்து முழுவதுமாய் மூடி திரி பொறுத்துவதற்காக ஒரு துளையினையும் அமைத்திருக்கிறார்கள், இதன் எடை 27 டன் ஆகும்.

 

 

பீரங்கியை தஞ்சையை அடுத்த மனோஜிபட்டியில் கொல்லர்கள் தயாரித்த பீரங்கி ஏழு கிலோமீட்டர் தூரம் எடுத்து வந்து இந்த குன்றின் மேல் ஏற்றி வைத்து மூன்று சிறு மேடைகளில் மேல் ஏற்றி வைத்துள்ளனர்.

உலகில் உள்ள பழைய பீரங்கிகளிலே இந்த ராஜகோபால பீரங்கி ஐந்தாம் இடத்தில் உள்ளது, ஆனால் பழமையினாலும் செய்யப்பட்ட விதத்தினாலும் முதல் இடத்தில் இருக்க வேண்டிய பீரங்கி தஞ்சை பீரங்கி தான் என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

CATEGORIES
TAGS