தஞ்சாவூர் சோழா லயன்ஸ் சங்கம் சார்பில் இன்ஸ்பெக்டர் சந்திராவிற்கு சேவைச் செம்மல் விருது.

தஞ்சை மாவட்டம்.
தமிழக அரசின் காவல்துறையில் காவல் ஆய்வாளராக நேரிய நெறியில் நின்று மக்கள் பணியாற்றும் மனிதநேயர், தஞ்சை மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் V. சந்திராவிற்கு தஞ்சாவூர் சோழா லயன்ஸ் சங்கம் சார்பில் ( பன்னாட்டு லயன்ஸ் சங்கம்) சேவைச் செம்மல் விருது 2022 வழங்கம் நிகழ்ச்சி தஞ்சாவூர் லயன்ஸ் கோல்டன் ஜூப்லி ஹாலில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் சோழா லயன்ஸ் சங்க தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். செயலாளர் குழந்தை சாமி, பொருளாளர் பிரபு சண்முகநாதன் ஆகியோர்முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆளுநர் லயன்ஸ் சேது சுப்பிரமணியன் வருகை தந்து, நேர்மையாகவும், துணிச்சலாகவும், களத்தில் என்றும், நேரிய நெறியில் நின்று மக்கள் பணியாற்றி வரும் மனிதநேயரும், தஞ்சை மேற்கு காவல் நிலைய ஆய்வாளருமான V.சந்திராவிற்கு சேவைச் செம்மல் விருது 2022 – வழங்கி சிறப்பித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட காவல் டுடே தலைமை நிருபரும், தமிழ்நாடு தளபதி அரசியல் மாத இதழின் தலைமை நிருபரும், தமிழகப் பத்திரிகையாளர் சங்கத்தின் தஞ்சை மாவட்டத் துணைத் தலைவருமான லயன்ஸ் L. பிரபாகர் மற்றும் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு விருது பெற்ற ஆய்வாளர் சந்திராவை வாழ்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.