BREAKING NEWS

தஞ்சாவூர் தெற்கு வீதி உள்ளிட்ட நான்கு வீதிகளில் 8 மாதங்களாக சாக்கடை மற்றும் பணி மந்தமாக நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

தஞ்சாவூர் தெற்கு வீதி உள்ளிட்ட நான்கு வீதிகளில் 8 மாதங்களாக சாக்கடை மற்றும் பணி மந்தமாக நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

 

தஞ்சாவூர் மாவட்டம்,

இந்தியாவில் தலைசிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக தஞ்சாவூர் விளங்குகிறது தினமும் பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களிலிருந்து ஆயிரகணங்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் தஞ்சை மாநகர் கடந்த ஒரு ஆண்டாக சீர்கேடு நிறைந்து காணப்படுகிறது.

 

 

 

அரண்மனையை சுற்றி அமைந்துள்ள ராஜவீதிகளான தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி, கீழ வீதி ஆகிய நான்கு வீதிகளில் சாக்கடை கட்டுவதாக கூறி ஆக்கிரமிப்புகளை அகற்றிய தஞ்சை மாநகராட்சி பல இடங்களில் இதுவரை கட்டுமான பணிகளை செய்யாததால் சாக்கடை கழிவு நீர் வழிந்தோடுவதால் கொசுக்கள் தொல்லை அதிகரித்து,..

 

 

 

தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது மக்கள் கூடும் கடைவீதியில் வியாபார நிறுவனங்களுக்கு செல்லும் வழிகள் எங்கும் இரும்பு கம்பிகள் உயிர் பலி வாங்க காத்திருக்கிறது.

 

 

 

இதனால் இந்த ஆண்டு தீபாவளி வியாபாரம் பாதியாக குறைந்துவிட்டது என வேதனை தெரிவிக்கும் வணிகர்கள் உயிர்பலி வாங்கும் முன்பு சாக்கடை கட்டும்படியை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )