தஞ்சாவூர், பூண்டி மாதா கோயிலில் அன்னையின் அலங்கார தேர்பவனி வாண வேடிக்கைகளுடன் இன்று இரவு விமரிசையாக நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி மாதா கோயிலில் அன்னையின் அலங்கார தேர்பவனி வாண வேடிக்கைகளுடன் இன்று இரவு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாதாவை வழிப்பட்டனர்:
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்துள்ள பூண்டியில் வீரமாமுனிவரால் 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமைவாய்ந்த பூண்டி மாதா பேராலயம் கிறிஸ்தவர்களிடையே மிகவும் பிரசித்திப் பெற்ற ஆலயம் இந்த ஆலயத்தில் ஏசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட மரத்துண்டின் ஒரு பகுதி பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ஆலயத்தில் மாதாவின் பிறப்பு பெருவிழா கடந்த 30 ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கி தினமும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது,
10 நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அன்னையின் அலங்கார தேர்பவனி இன்று இரவு நடைபெற்றது
மல்லிகை சரங்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் மாதாவின் சொரூபம் வைக்கப்பட்டு கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் அந்தோனிசாமி அடிகளார் புனிதம் செய்து அலங்கார தேர்பவனியை தொடங்கி வைத்தார் ஏராளமான பக்தர்கள் மரியே வாழ்க என பக்தி கோஷமிட்டு மாதாவை வழிபட்டனர்.
அதனைத்தொடர்ந்து வாண வேடிக்கைகளும் நடைபெற்றது, இந்த தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று பின்னர் கோவிலை வந்தடைந்தது, இதில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்பட பிற மாநிலங்களை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.