தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கணபதி தரிசன கண்காட்சி மற்றும் விற்பனை

விநாயகர் சதுர்த்தி விழா வரும் 31ந் தேதி நடைபெற உள்ள நிலையில் தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கைவினை கலைஞர்களால் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் பஞ்சலோகம் காகித கூழ் களிமண், கருங்கல் பித்தளை, வெள்ளை உலோகம், கருப்பு உலோகம் நவரத்தினம் வெள்ளெருக்கு, நூக்க மரம் போன்றவற்றிலும், தஞ்சை கலைத்தட்டுகள் மற்றும் தஞ்சை ஓவியங்களிலும் பல்வேறு வடிவங்களில் உள்ள விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு கண்காட்சி மற்றும் விற்பனையில் இடம்பெற்றுள்ளன இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ள பொருட்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது, இக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு விநாயகர் சிலைகளை வாங்கி செல்கின்றனர்
CATEGORIES தஞ்சாவூர்