BREAKING NEWS

தஞ்சாவூர் மண்டல நிர்வாகத்தைக் கண்டித்து மண்டல அலுவலகம் முன் டி என்சிஎஸ்சி சுமை தூக்குவோர் சங்கம் கண்டன ஆர்பாட்டம்.

தஞ்சாவூர் மண்டல நிர்வாகத்தைக் கண்டித்து மண்டல அலுவலகம் முன் டி என்சிஎஸ்சி சுமை தூக்குவோர் சங்கம் கண்டன ஆர்பாட்டம்.

 

தஞ்சாவூர் தமிழ்நாடு நுகர்பொருள்வாணிபக்கழகதஞ்சாவூர் மண்டல அலுவலகம் முன் டிஎன்சிஎஸ்சி சுமைதூக்குவோர் மாநில பாதுகாப்பு சங்கத்தினர் மாநிலத் தலைவர் வழக்கறிஞர்எம்.வீரராகவன் தலைமையில் பழி வாங்கப்படுவதற்க்கு துணை போகும் தஞ்சாவூர் மண்டல நிர்வாகத்தைக் கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.

முன்னதாகமாநிலத் தலைவர் வழக்கறிஞர் எம்.வீரராகவன் பாதுகாப்பு சங்கத்தின் புதிய பெயர் பலகையை திறந்து வைத்து சங்க கொடி கம்பத்தில் சங்க கொடியை ஏற்றிவைத்து கண்டன உரையாற்றினார்.

 

சங்க தலைவர் என்.வீரராகவன் பேசியதாவது,எங்கள் சங்கத்தை சார்ந்த தொழிலார்களை மட்டும் பல வகைகளில் பழிவாங்க படுகிறார்கள் என்பதை தஞ்சை மண்டல முதுநிலை மேலாளரான தங்களிடம் நாங்கள் கடந்த ஒரு வருடத்திற்க்கும் மேலாக புகார் தெரிவித்து வருகிறோம்.

 

தாங்கள் சரி செய்கிறோம் என்று சொல்வதோடு சரி, எந்தவிதமான பிரச்சனை மீதும் தாங்கள் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை. பட்டுக்கோட்டை கிடங்கில் பணி செய்த சிவக்குமார் என்பவரை ஒரத்தநாடு கிடங்கிற்கு இடமாற்றம் செய்து ஒரு மாத காலம் பணி செய்ய பணித்தீர்கள்.

 

இரண்டு மாதம் முடிந்து 4 மாதங்கள் கடந்து விட்டது. அவருக்கு பணியிடமாற்றம் கேட்டு கடந்த இரண்டு மாதங்களாக எங்களது மாநில பொறுப்பாளர்களும், மாவட்ட பொறுப்பாளர்களும் கேட்டு வருகிறார்கள். தாங்களும் பணியிடமாற்றம் போட சொல்லி ராணி என்கின்ற AM-மேடத்திடம் கூறினீர்கள். அவர் இதுநாள் வரையில் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை.

 

கடைசியாக 20.10.2022 அன்று எங்களது மாநில பொறுப்பாளர் திருச்சியில் இருந்து சதிஷ் என்பவர் தங்களிடம் சிவக்குமார் குறித்து பேசிய போது சிவகுமார் வந்தால் நாங்கள் பணி செய்யமட்டோம் என்று பட்டுக்கோட்டை தொழிலாளர்கள் கடிதம் கொடுப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

 

ஒரு தொழிலாளியை பணியில் சேர்ப்பதும் பணி நீக்கம் தவிர மற்ற தொழிலாளர்களின் விருப்பத்தை கேட்பது என்பது கண்டனத்திற்க்குரியது இந்த நடைமுறையை தமிழ்நாடு முழுவதும் எங்கள் சங்கத்தை சார்ந்த தொழிலாளர்கள் உள்ள கிடங்குகளில் மாற்று சங்கத்தை சார்ந்த தொழிலாளர்களை பணிக்கு சேர்க்கமாட்டோம் என்ற நடைமுறையை நாங்கள் கடை பிடித்தால் நிர்வாகம் சரியாக நடைபெறாது. இது போன்று ஒரு சில மாவட்டங்களில், ஒரு சில கிடங்களில் ஒன்று, இரண்டு தொழிலாளர்கள் உள்ளார்கள்.

 

அது தவறு என்றும் பணியாளர்கள் மற்றும் சுமை பணி தொழிலாளர்களுக்கும் ஊக்கத்தொகையாக ரூ.1500 தமிழக அரசு வழங்கியது. ஆனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் 31.10.2022 வரை சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மட்டும் ஊக்க தொகை வழங்கவில்லை.

 

போனஸ் என்பது வாரக்கூலி வங்கி கணக்கில் கூலி பெறும் அத்தனை தொழிலாளர்களுக்கும் அவர்கள் பணி செய்து கூலி வாங்கும் அளவிற்கு ஏற்ப வழங்கப்படுகிறது. அதே நடைமுறை தஞ்சாவூரில் பின்பற்றி கணக்கிட்டு வழங்கப்பட்டுள்ளது. அதாவது அனைத்து கிடங்குகளிலும் வருகை பதிவேட்டில் பெயர் உள்ள அட்டை பெறாத தொழிலார்களுக்கு போனஸ் வழங்கப்பட்டுள்ளது.

 

ஆனால் எங்களது சங்கத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு வருகை பதிவேட்டில் பெயர் உள்ளவர்களுக்கு கருணைத் தொகையான ரூ.3000த்தை மட்டும் பேராவூரணி கிடங்கு தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளார்கள். இதை மண்டல அலுவலகத்தில் போனஸ் கணக்கீடு செய்த பணியாளர் தெரிந்தே செய்து இருகிறார்.

 

அவர் யாருடைய தூண்டுதலின் பெயரில் இதை செய்தார் என்பதை தாங்கள் விசாரணை செய்து அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான போனஸ் கிடைக்க வேண்டும். அதாவது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மண்டல நிர்வாகிகளுக்கு மட்டும் தனி சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

 

2017ல் தலைமை அலுவலக உத்திரவு இல்லாமல் தொழிலாளர்களை பணியில் சேர்க்க கூடாது என்ற ஆணையை பின்பற்றி தமிழ்நாடு முழுவதும் வருகை பதிவேட்டில் பெயர் சேர்க்காமல் பணி செய்து வருகிறார்கள்.

 

ஆனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் போன்ற ஒரு சில கிடங்குகளில் கடந்த 2020ல் பணி செய்து வருகிறவார்களை வருகை பதிவேட்டில் பெயர் சேர்த்துள்ளார்கள்.

 

இதற்கு மண்டல நிர்வாகமும் துணை நிற்கிறது. பட்டுக்கோட்டை கிடங்கில் குபேந்திரன் என்ற தொழிலாளி தனது மனைவி 2011 முதல் 2016 வரை பஞ்சாயத்து தலைவராக இருந்த கால கட்டத்தில் அவர் 5 ஆண்டுகள் பணிக்கு வரவில்லை. 5 ஆண்டுகள் கழித்து அவர் பணிக்கு வந்ததும் பணியமர்தப்படுகிறார்.

 

இவருக்கு எந்த அடிப்படையில் அவருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டது என்று தெரியவில்லை. தவறே செய்யாத தொழிலாளியை (சிவக்குமார்) காலில் விழ வைத்த இராமசந்திரன் மீது இது வரையில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 

தற்போது சிவக்குமார் பட்டுக்கோட்டை கிடங்கிற்க்கு வருவதற்கு இடையூறு ஏற்படுத்துபவர் ராமச்சந்திரன் என்று தங்களிடம் கூறியும் இது வரையில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க வில்லை. என பேசினார். மாவட்ட மாநில பொறுப்பாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )