தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 8 லட்சம் மதிப்பில் செயற்கை அவைய தயாரிப்புக் கருவி இயக்கி வைப்பு.

இந்தியாவில் முதன் முதலாக உலக செயற்கை அவைய தினம் கொண்டாட அரசு தெரிவித்துள்ளது அதன்படி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் செயற்கை அவையங்கள் தயாரிப்பு துணை நிலையத்தில் செயற்கை அவைய தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் கலந்து கொண்டு ரூ 8 லட்சம் மதிப்பில் புதிய செயற்கை அவையங்கள் தயாரிப்பு கருவியினை இயக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய அவர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவரை 185 செயற்கை அவையங்கள் தயாரிக்கப்பட்டு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டுள்ளது, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த தினம் கொண்டாடப்படுகிறது என்றும்,
முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் இந்த செயற்கை அவையங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் டாக்டர்கள் செல்வம், குமரவேல், டெக்னிசியன் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.