தஞ்சாவூர் மாநகராட்சியின் மாதாந்திர கூட்டத்தில் ஸ்டாலின் வாழ்க என திமுகவினரும் – ஒழிக என அதிமுக கூட்டணி ஏதும் கோஷமிட்டதால் சலசலப்பு.

அதிமுகவை சேர்ந்த 30-வது வார்டு மாமன்ற உறுப்பினரை , திமுகவை சேர்ந்த 11வது வார்டு உறுப்பினர் வெளியே போயா என தள்ளியதால் பரபரப்பு. ஸ்டாலின் வாழ்க என திமுகவினரும் – ஒழிக என அதிமுக கூட்டணி ஏதும் கோஷமிட்டதால் சலசலப்பு.
தஞ்சாவூர் மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் மேயர் ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவை சேர்ந்த மணிகண்டன் பேசும் போது அண்மையில் தஞ்சையில் நடைபெற்ற வடிகால் வாய்க்கால் பாலம் இடிந்து லாரி விபத்துக்குள்ளானது.
இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், எனவே உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த பிரச்சினை தொடர்பாக அவர் பேசும் போது அவரது மைக் ஆப் செய்ததால் அதிமுகவினற்க்கும் – திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அதிமுகவை சேர்ந்த 30 வது வார்டு மன்ற உறுப்பினர் கேசவன் கோஷம் போட்ட போது, அவரை 11வது வார்டை சேர்ந்த திமுக உறுப்பினர் பாலசுப்பிரமணியன் வெளியே போயா என நெஞ்சில் கை வைத்து தள்ளியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனை கண்டித்து அதிமுக, அமமுக, பாஜக உறுப்பினர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் கூட்ட அரங்கத்தை விட்டு வெளியேறிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.