BREAKING NEWS

தஞ்சாவூர் மாநகராட்சியில் காலாவதியான தீயணைப்பான் கருவி பொருத்தி வைப்பு.

தஞ்சாவூர் மாநகராட்சியில் காலாவதியான தீயணைப்பான் கருவி பொருத்தி வைப்பு.

 

தஞ்சாவூர் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன இப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களது வீட்டு வரி, குடிநீர்வரி, கட்டிட அனுமதி மற்றும் பிறப்பு இறப்பு சான்றிதழ் பெறுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக..

 

 

மாநகராட்சி அலுவலகத்திற்கு ஏராளமானோர் வருகை தருகின்றனர். மேலும் புதிதாக கட்டப்பட்ட மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் அலுவலகம், ஆவண காப்பகம் ஆகியவை உள்ளன.

 

 

இதனையடுத்து பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும் அலுவலகத்தின் பாதுகாப்பு கருதியும் அங்கு 25க்கும் மேற்பட்ட தீயணைக்கும் தீயணைப்பான் கருவிகள் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளது.

 

 

இந்நிலையில் அந்த தீயணைப்பான் கருவிகள் கடந்த ஒரு ஒரு வருட காலமாக ரீபிள் நிரப்பப்படாமல் பயன்பாடு அற்ற நிலையில் காட்சி பொருளாக காட்சி அளிக்கிறது.

 

பேரிடர் காலங்களில் ஆபத்து ஏற்பட்டால் தீயணைப்பு கருவியை பயன்படுத்தும் வகையில் அதனை சரி செய்து வைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )