BREAKING NEWS

தஞ்சாவூர் மாவட்டத்தில் வெறிநோய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் வெறிநோய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

 

தஞ்சாவூரில் மாதாக்கோட்டை ரோட்டில் எஸ்பிசிஏ (SPCA) அலுவலகத்தில் வெறி நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

 

இம்முகாமில் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணி நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி போடப்பட்டது,மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரமும் வழங்கப்பட்டது.

 

 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட ஆட்சியர்,தஞ்சாவூரில் 4.5 ஏக்கரில் அமைந்துள்ள இந்த இடம் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து விற்பனை செய்யப்பட இருந்த நிலையில் அதை தடுத்து.

 

இடத்தை பாதுகாக்கும் வகையில் சுற்றுச்சுவர் அமைத்து சுமார் 50 லட்சம் மதிப்பில், பிராணிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு தடுப்பூசி முகாம் துவக்கப்பட்டுள்ளது.

 

 

என்றும் மேலும் பிராணிகள் பிறப்பு கட்டுப்பாடு செயல்பாடு, மற்றும் பிராணிகள் விபத்து பராமரிப்பும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார், மேலும் தமிழ்நாட்டில் சென்னை தவிர தஞ்சாவூர் மாவட்டத்தில்தான் எஸ்பிசிஏ(SPCA) அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது என்றும்,.

 

 

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் இரண்டு பேர் வெறிநாய் கடியால் உயிர் இழந்துள்ளனர், தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒருவர் கூட உயிர் இழப்பு ஏற்படக் கூடாது என்பதை மையமாக வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார், இந்நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவர்கள் மற்றும் எஸ்பிசிஏ உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS