தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் காவல் பயிற்சிபள்ளி பயிற்சி காலலர்களின் நிறைவு விழா நேற்று மாலை நடைபெற்றது.

கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் 14 ம் தேதி அன்று திருச்சி மாநகரம், சேலம் மாநகரம், திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, விழுப்புரம். கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், திருவாரூர், நாகப்பட்டினம்.
நாமக்கல், சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய 16 மாவட்டங்களில் இருந்து 225 நபர்கள் இரண்டாம் நிலை காவலர் அடிப்படை பயிற்சிக்கு தஞ்சாவூர் தற்காலிக காவல் பயிற்சி பள்ளியில் அறிக்கை செய்தவர்களுக்கு இப்பயிற்சிப் பள்ளியின் முதல்வர் ரவளி ப்ரியா காந்தபுனேனி, காவல் கண்காணிப்பாளர், தஞ்சாவூர் மாவட்டம், துணை முதல்வர் முருகேசன் காவல் துணை கண்காணிப்பாளர், ஆயுதப்படை, தஞ்சாவூர், முதன்மை சட்ட போதகர் அகிலாண்டேஸ்வரி, முதன்மை கவாத்து போதகர் விஜயலெட்சுமி மற்றும் உதவி சட்ட போதகர்கள், உதவி கவாத்து போதகர்களை கொண்டு சிறந்த முறையில் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு நேற்று நிறைவு விழா நடைபெறுகிறது.
தஞ்சாவூர் காவல் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்ற 225 பயிற்சி காவலர்களில் 17 பயிற்சி காவலர்கள் முதுகளை பட்டதாரிகள், 152 பயிற்சி காவலர்கள் இளங்கலை பட்டம் பெற்றவர்கள், அவர்களில் 73 காவலர்கள் பொறியியல் பட்டதாரிகள் ஆவர்கள்.
இந்த பயிற்சி காலங்களில் பயிற்சி காவலர்களுக்கு மிடுக்காக நடப்பதற்கும், எந்த இடத்திலும், எந்த சூழ்நிலையிலும் பணி செய்வதற்கான அவர்களது உடற்தகுதியை மேம்படுத்தி கவாத்து பயிற்சியும், சட்ட விரோதமான செயல்களை தடுத்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுதருவதற்கு ஏதுவாக Major Acts & Minor Acts கணினி குற்றங்கள்,
மனிதஉரிமை உளவியல் மற்றும் நீதிமன்ற நடைமுறைகள் பற்றிய சட்டங்கள் கற்று கொடுத்தும் மேலும் கமாண்டோ, தீ விபத்து இயற்கை சீற்றங்களால் ஏற்படும் புயல், வெள்ளம் ஆகியவற்றிலிருந்து பொது மக்களை மீட்பதற்கான மீட்பு பணி, முதல் உதவி சிகிச்சை, தடய அறிவியல் கைரேகைகளை பதிவு செய்வது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்களையும், குழந்தைகளையும் எவ்வாறு காப்பாற்றி கையாளுவது, முக்கிய நபர் மற்றும் மிக முக்கிய நபர்களின் வருகையின்போது எவ்வாறு பாதுகாப்பு அளிப்பது, வெடிகுண்டை கண்டுபிடிப்பது மற்றும் செயல் இழக்க செய்து அப்புறப்படுத்துவது,
மோப்ப நாய்களைக் கொண்டு குற்றவாளிகளை எவ்வாறு கண்டுபிடிப்பது தற்காப்பு கலை, குண்டுசுடுதல், கணினி, நீச்சல் யோகா Stress Management, ஆகிய பயிற்சி வகுப்புகள் காவல்துறை அதிகாரிகள் மற்றும் சிறப்பு: நிபுனர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஏழு மாத காலமாக இந்த பயிற்சி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவில் தலைமை விருந்தினராக காவல்துறை தலைவர், பணியமைப்பு சென்னை மல்லிகா கலந்து கொண்டு இப்பயிற்சி பள்ளியில் சட்டம், கவாத்து மற்றும் குண்டுசுடும் பயிற்சிகளில் முறையே முதல் மூன்று இடங்களை பெற்ற பயிற்சி காவலர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி விழா பேருரை ஆற்றினார்கள்.
இந்நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவலர்கள், பொதுமக்கள் என திரளானோர் பங்கேற்றனர்.