தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல், குற்றவாளிகள் தலைமறைவு.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் உட்கோட்டை காவல் சரகத்தில் நாட்டு வெடிகுண்டுகள் புழக்கத்தில் இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தஞ்சாவூர் மாவட்ட காவல் எஸ்பி ஆஷிஸ் ராவத் அவர்களின் உத்தரவின் படி திருவிடைமருதூர் உட்கோட்ட டிஎஸ்பி ஜாபர் சித்திக் அவர்கள் தலைமையிலான தனிப்படையினர்.
துப்பறியும் நாய்ப்படை பிரிவினர் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழுவினருடன் இன்று (21.1.23) பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் குற்ற சம்பவத்தில் தொடர்புடைய பிரபல ரவுடிகளின் வீடுகளில் சோதனை மேற்கொண்டதில் சந்தேகத்திற்கிடமாக சைக்கிள் பால்ட்ரஸ், ஆணிகள் மற்றும் பட்டாக்கத்திகள் ஆகிய பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
இந்த சோதனையின் போது சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் தலைமறைவாகி விட்டனர். போலீசாரின் இந்த அதிரடி சோதனையால் நடைபெற இருந்த பெரும் குற்ற செயலின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.
மேலும் தலைமறைவாக இருந்து வரும் குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.