தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயத்தில் புதுமை மாதா பிறப்பு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வீரமாமுனிவரால் கட்டப்பட்ட வரும் பசிலிக்கா அந்தஸ்து பெற்றதுமான தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயத்தில் புதுமை மாதா பிறப்பு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட 3 மாதா சொரூபங்களில் ஒன்று இப்போராலத்தில் அழகிய மாதாவாக காட்சியளிப்பதும் இயேசு சிலுவையில் அறையப்பட்ட சிலுவை மர துண்டின் ஒரு பகுதி இந்த ஆலயத்தில் பக்தர்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டு இருப்பதும். பூண்டி மாதா பேராலயத்தில் தனிச் சிறப்புகளாகும்
இந்த பேராலயத்தின் புதுமை மாதா பிறப்பு பெருவிழாவை ஒட்டி மாதாவின் திருஉருவம் பொறித்த கொடி ஊர்வலமாக பேண்டு வாத்தியங்கள் முழங்க கொண்டு வரப்பட்டு குடந்தை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி மாதாவின் திரு உருவம் பொறித்த கொடியை புனிதம் செய்து பிரம்மாண்ட கொடிமரத்தில் ஏற்றினார்.
இன்று தொடங்கி தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் திருப்பலிகள் நடைபெற உள்ளன.
விழாவின் ஒரு பகுதியான மாதாவின் சொருபம் தாங்கிய மல்லிகை பூ வினால் அலங்கரிக்கப்பட்ட மின்சார தேர் பவனி வரும் 8ஆம் தேதி இரவு நடைபெறுகிறது.
விழாவில் தமிழகம் மட்டுமின்றி கேரளா கர்நாடகா ஆந்திரா புதுவை உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மாதாவின் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.