தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதிகளில் சொகுசு காருக்கு இணையாக மின்னும் சைக்கிளில் பாடல் கேட்டு கொண்டே உலா வரும் வாலிபர்.
வண்ண வண்ண விளக்குகளால் மின்னும் இந்த சைக்கிள் சினிமா சூட்டிங்கிற்காக அலங்கரிக்கப்பட்டது அல்ல அன்றாட தேவைக்கு பயன்படுத்தப்படும் மிதிவண்டியே இவ்வாறு அலங்கரிக்கப்பட்டுள்ளது.
பாபநாசம் பகுதிகளில் உலா வரும் இந்த மின்னும் சைக்கிள் ஜாபர் அலியின் கைவண்ணத்தால் சொகுசு காருக்கு இணையாக ஜொலிக்கிறது.
மிதிவண்டி என்றாலே ஆடம்பர வசதிகள் குறைவாக இருக்கும் என்ற எண்ணத்தை மாற்றி அமைக்கும் இந்த மிதிவண்டி வருங்கால இளைஞர்களுக்கிடையே ஒரு நல்ல வரவேற்ப்பை தரும் என்கிறார் ஜாபர் அலி.
இந்த ஆடம்பர மின்னும் சைக்கிளை உருவாக்க ஒரு மாதம் பத்து நாட்களாய் தயாரித்தாராம் இதற்கு முப்பதாயிரத்திற்கும் மேல் செலவு செய்தாகவும் இந்த சைக்கிள் ஒருமுறை சார்ச் செய்தால் 35 கிலோ மீட்டர் வரை செல்லலாம் எனவும் தெரிவித்தார்.
CATEGORIES தஞ்சாவூர்
TAGS தஞ்சாவூர் மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்பாபநாசம்மிதிவண்டிமுக்கிய செய்திகள்வண்ண விளக்குகளால் மின்னும் சைக்கிள்