தஞ்சையில் ஒபிஎஸ் ஆதரவாளர் இல்ல திருமண விழாவில் சசிகலா, ஒபிஎஸ். தினகரன், வைத்திலிங்கம் ஆகியோர் புகைப்படங்கள்.

தஞ்சையில் ஒபிஎஸ் ஆதரவாளர் இல்ல திருமண விழாவில் சசிகலா, ஒபிஎஸ். தினகரன், வைத்திலிங்கம் ஆகியோர் புகைப்படங்களுடன் கூட்டுத் தலைமைகளே வருக என வாசகம் அச்சிடப்பட்டு வைக்கப்பட்டு இருந்த பிளக்ஸ் பேனர் அனைவரது கவனத்தையும் கவர்ந்தது.
அவரவர் அவரவராக இருந்து வருங்காலத்தில் அம்மா ஆட்சி அமைக்க இணைந்து செயல்படுவோம் என பன்னீம் செல்வம் தெளிவாக சொல்லி இருக்கிறார் என தினகரன் இரண்டு தினங்கள் முன்பு தஞ்சையில் பேட்டி அளித்த நிலையில், தஞ்சை மாவட்டம் பசுபதிகோவிலில் ஒ.பி.எஸ் ஆதரவாளரும், தகவல் தொழில் நுட்ப பிரிவு வடக்கு மாவட்ட செயலாளருமான சதிஷ் சகோதார் திருமணம் நாளை 1ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக வைக்கப்பட்டு இருந்த பிளக்ஸ் பேனரில் சசிகலா, ஒ.பி.எஸ், தினகரன், வைத்திலிங்கம் ஆகியோரது புகைப்படங்களுடன். கூட்டு தலைமைகளே வருக என. வாசகத்துடன் உள்ள பேனர் அனைவரது கவனத்தையும் கவர்ந்தது.