தஞ்சையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.
கடந்த ஆண்டு 1 லட்சத்து 80 ஆயிரம் இடைநிற்றல் மாணவர்கள் கண்டறியப்பட்டனர். அதேபோல் இந்த ஆண்டு கணக்கெடுக்கும் பணியும், மேலும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் யார் இடை நிற்றலுக்கு ஆளாவார்கள் கண்டறிய உள்ளோம் தஞ்சையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.
சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் தஞ்சையில் சமுதாய வளைகாப்பு விழா நடைப்பெற்றது. தஞ்சை ஊரகம் மற்றும் நகரம் சார்பில் நடந்த விழாவில் 400 கர்ப்பிணி கர்ப்பிணி பெண்களுக்கு சந்தனம், குங்குமம் இட்டு. கைகளில் வளையல் அணிவித்தனர்.
தொடர்ந்து, கர்ப்பிணி பெண்களுக்கு சேலை. ஊட்டசத்து அடங்கிய தொகுப்புகள் அடங்கிய சீர் வரிசை பொருட்களை அமைச்சர் அன்பில்.மகேஷ் வழங்கி, அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்து கொண்டார். பின்னர் அறுசுவை உணவினை கர்ப்பிணி தாய்மார்களுக்கு பரிமாறி பேட்டியளித்த அவர் கடந்த ஆண்டு 1 லட்சத்து 80 ஆயிரம் இடைநிற்றல் மாணவர்கள் கண்டறியப்பட்டனர்.
அதேபோல் இந்த ஆண்டு கணக்கெடுக்கும் பணியும், மேலும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் யார் இடை நிற்றலுக்கு ஆளாவார்கள் கண்டறிய உள்ளோம். நம்ம ஊர் பள்ளி திட்டத்திற்கு தமிழக முதல்வர் ரூ.5 லட்சம் வழங்கியுள்ளார். முதல் நாளிலேயே ரூ.50 கோடி ரூபாய் வசூல் ஆகி உள்ளது.
நன்கொடையாளர்கள் வழங்கும் பணம் சரியான வழியில், சரியான படி செல்லுகிறது என என்றைக்கு அவர்கள் நம்புகிறார்களோ, அன்று இன்னும் அதிகமாக நன்கொடையை அவர்கள் வழங்குவார்கள். இந்தத் திட்டத்தின் கீழ் நிதி வழங்குவதற்கு உரிய ரசீது வழங்கப்படுகிறது. மேலும், அவர்கள் விருப்பப்பட்டு பள்ளி கட்டிடம் கட்டி கொடுத்தால் கல்வெட்டில் பெயர் பொறிக்கப்படும்.
திருமண்டங்குடியில் போராடிவரும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அவர்களை அழைத்துப் பேசி, அதை எப்படி சுமுகமாக முடித்து வைக்க, மாவட்ட நிர்வாகம் மற்றும் அந்த தொகுதி எம்எல்ஏ பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.
இளைஞர்கள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதன்முதலாக அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்வது சந்தோஷமான விஷயம் என தெரிவித்தார்.