BREAKING NEWS

தஞ்சையில் வந்தே பாரதம் மண்டல அளவிலான நடனப் போட்டி 600 கலைஞர்கள் பங்கேற்பு.

தஞ்சையில் வந்தே பாரதம் மண்டல அளவிலான நடனப் போட்டி 600 கலைஞர்கள் பங்கேற்பு.

தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தில் வந்தே பாரதம் மண்டல அளவிலான நடனப் போட்டி 600 கலைஞர்கள் பங்கேற்பு, குடியரசு தின கலை நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு தஞ்சாவூரில் மத்திய அரசின் தென்னகப் பண்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது.

 

 

 இம்மையத்தில் கலாச்சார அமைச்சகம் சார்பில் தமிழ்நாடு புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த 17 முதல் 30 வயது வரை உள்ள நடன கலைஞர்களுக்கு மாநில மற்றும் மண்டல அளவிலான வந்தே பாரதம் நடனப் போட்டிகள்(தனி மற்றும் குழு) இரண்டு நாட்கள் நடைபெற்றது.

 

 

பரதநாட்டியம், கதகளி  குச்சப்புடி, தப்பாட்டம், கரகம், காவடி,  புலியாட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகிறது இப்போட்டிகளில் 600 கலைஞர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிக்காட்டினர்.

 

 

 

 

இப்போட்டிகளில் வெற்றி பெறும் கலைஞர்கள் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று அதில் வெற்றி பெற்றால் ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழா கலை நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கப்பெறும் இதில் தமிழ்நாடு புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்றனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )