தஞ்சையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து போக்குவரத்து காவல்துறையினர் ஆசிரியர்கள் கலந்து கொண்டு 10 கிலோமீட்டர் தொலைவிற்கு இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி.

தஞ்சை அடுத்த வல்லதில் போக்குவரத்து காவல்துறை மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் இணைந்து, இருசக்கர வாகன ஓட்டுனர்கள் தலைகவசம் அணிந்து பயணிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

பேரணியினை காவல்துறை துணை கண்காணிப்பாளர், தலைமையில் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தமிழகம் முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வருகிறது. அதனால் தலைகவசம் உங்களோடைய உயிர் கவசம் என்று கருதி, தலைகவசம் அணியாமல் வாகனத்தில் செல்லாதீர்கள். இரு சக்கர வாகனத்தில் பயணிப்பவர்களின், பாதுகாப்பை கருத்தில் கொண்டு தலை கவசம் அணிவது கட்டாயமாகபட்டுள்ளது.

தலைகவசம் அணியாமல் பயணித்தால், 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும், என்று தெரிவித்தார். தலைகவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு துண்டு பிரசுரங்களும் எச்சரிக்கையும் கொடுத்தனர்.

மேலும் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து பொதுமக்களுக்கு ஹெல்மெட் ஆராய்ச்சி அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது இந்த பேரணி வல்லத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவு வரை தஞ்சை வந்தடைந்தது.
