தஞ்சையில் 8-டன் பாரம்பரிய விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக உழவர் சந்தையில் 10 இயற்கை அங்காடிகள் திறந்து வைத்த ஆட்சியர் தகவல்.

தஞ்சை மாவட்டத்தில் 8 டன் பாரம்பரிய விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக உழவர் சந்தையில் 10 இயற்கை அங்காடிகள் திறந்து வைத்த ஆட்சியர் தகவல்.
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை சார்பில் தஞ்சாவூர் உழவர் சந்தையில் இயற்கை வேளாண்மை பொருட்கள் மற்றும் பாரம்பரிய தின்பண்டங்கள் விற்பனை செய்யக்கூடிய 10 அங்காடிகள் அமைக்கப்பட்டு அதனை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இன்று திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார்.
இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட கீரை வகைகள் காய்கறி வகைகள் உள்ளிட்ட இயற்கை விளை பொருட்களை பார்வையிட்ட ஆட்சியர் தமிழக அரசு இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க வலியுறுத்தி உள்ளதை தொடர்ந்து.
தஞ்சை மாவட்டத்தில் 15 டன் பாரம்பரிய விதைகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்போது 9 டன் வரை பாரம்பரிய இயற்கை விதைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.