BREAKING NEWS

தஞ்சை கீழவாசல் பகுதியில் டீ கடையில் சிலிண்டர் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் கடை உரிமையாளர் காயம் அடைந்தார். இரண்டு, இரு சக்கர வாகனங்கள் முற்றிலுமாக எரிந்து எலும்புக் கூடானது

தஞ்சை கீழவாசல் பகுதியில் டீ கடையில் சிலிண்டர் வெடித்ததில்  ஏற்பட்ட தீ விபத்தில் கடை உரிமையாளர் காயம் அடைந்தார். இரண்டு, இரு சக்கர வாகனங்கள் முற்றிலுமாக எரிந்து எலும்புக் கூடானது

தஞ்சை கீழவாசல் நான்கு வழி சாலை சந்திப்பில் பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான கண்ணையன் டீ ஸ்டால் முன்பு சிலிண்டர் அடுப்பில் வைத்து பலகாரம் சுடும் போது எதிர்பாரதவிதமாக சிலிண்டரில் இருந்து கியாஸ் வெளியாகி உள்ளது. இதனை பலகார மாஸ்டர் கவனிப்பதற்குள் கியாஸ் அழுத்தம் காரணமாக ரெகுலேட்டர் சிதறி தீ பற்ற தொடங்கியது. இதனை அடுத்து டீ கடைக்குள் இருந்தவர்கள், டீ அருந்தி கொண்டு இருந்தவர்கள் அங்கு இருந்து தப்பினர். இருந்த போதிலும் டீ கொளுந்து விட்டு எரிந்ததில் கடை முன்பு நிறுத்தப்பட்டு இருந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் முற்றிலுமாக எரிந்து எலும்பு கூடானது கடை உரிமையாளர் பாலமுருகனுக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்து குறித்து தஞ்சை கிழக்கு காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )