BREAKING NEWS

தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் ஆசிரியர் தின கொண்டாட்டம் நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்யார்.

தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் ஆசிரியர் தின கொண்டாட்டம் நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்யார்.

ஆசிரியர் தின கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாக தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் தஞ்சை மேம்பாலம் அரசு பார்வை திறன் குறை உடையவர்களுக்கு கான மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு சுமார் 300 விலையில்லா நோட்டு புத்தகங்கள் பள்ளி அளவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

 

நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 

 

பள்ளி மாணவர்களிடம் மாவட்ட ஆட்சியர் பேசுகையில் பார்வை திறன் குறை உடையோருக்கான இந்த சிறப்பு பள்ளியில் பிரெய்லி வழியில் பாடங்கள் நடத்தப்பட்டு சென்ற ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதும்

படிப்புதான் வாழ்க்கையை மாற்றும் ஒருவரை வெளி உலகத்துக்கு நிரூபிக்க உதவும் ஒரே ஆயுதம் கல்வி மட்டுதான் உதவும் என்று கூறினார்

 

பார்வை திறன் குறைபாடு கொண்ட மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பள்ளி அறிவில் நடைபெற்ற கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி நடனம் சதுரங்கம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கலெக்டர் பரிசு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்

 

மேலும் இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து விரிவு காவல் ஆய்வாளர் விச்சந்திரன் மற்றும் மேற்கு இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் பார்வை திறன்குறையுடை யோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி முதல்வர் சோபியா மற்றும் ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர் ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை மேலாளர் ஞான சுந்தரி தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )