தஞ்சை பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தஞ்சையில் தூய அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு எம் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.
எம் பள்ளியில் தாளாளர் அருட்திரு கே ஜெரோம் முன்னிலையில், எம் பள்ளியின் தலைமையாசிரியர் அருட்திரு பி. அல்போன்ஸ் அந்தோணி ராஜ் மற்றும் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் கிளமெண்ட் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தஞ்சை போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு ரவிச்சந்திரன் அவர்கள் பங்கேற்று எம் மாணவர்களுக்கு போக்குவரத்து விதிகள் பற்றியும், இன்றைய நிலையில் மாணவர்களின் கடமைகள், பற்றியும் விரிவாகவும், தெளிவாகவும், தம் அனுபவங்களையும் கூறி வழிகாட்டினார்கள்.
நிகழ்வின் நிறைவாக உதவி தலைமை ஆசிரியர் எஸ். ஜோசப் அவர்கள் நன்றி கூறினார்.விழாவை உடற்கல்வி இயக்குனர் பவுல் உடற்கல்வி ஆசிரியர்கள் ஜோன்ஸ் மற்றும் ஜோசப் அவர்கள் சிறப்பாக வழி நடத்தினார்.
