BREAKING NEWS

தஞ்சை பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் அனைத்துத் துறைசார் சங்கங்களின் துவக்க விழா

தஞ்சை பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில்  அனைத்துத் துறைசார் சங்கங்களின்  துவக்க விழா

தஞ்சை விளார் பைபாஸ் அருகில் செயல்பட்டு வரும் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் அனைத்துத் துறைசார் சங்கங்களின் துவக்க விழா நேற்று கல்லூரி வளாகத்திற்குள் நடைபெற்றது. இந்த விழாவிற்கு கல்லூரியின் செயலர் அருட் சகோதரி முனைவர் மரியம்மாள் தலைமை வகித்தார். இயக்குனர் அருட் சகோதரி டெரன்சியா மேரி, முதல்வர் முனைவர் காயத்ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் கலந்துகொண்டார். அனைத்துத் துறைசார் சார்பில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களால் தேர்வு செய்யப்பட்ட கல்லூரி மாணவியர் சங்க உறுப்பினர்களுக்கும், துறை சார் சங்கங்களின் உறுப்பினர்களுக்கும் இலட்சினை வழங்கி கௌரவிக்கப்பட்டது. 2021-2022 கல்வி ஆண்டின் முதல் மதிப்பெண் பெற்ற அனைத்து துறை மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

விழாவில் வணிகவியல் துறை பேராசிரியர் கிறிஸ்டி, உயிர் தொழில் நுட்பவியல் துறை பேராசிரியர் முனைவர் அமர்கீதா மற்றும் எனது துறை பேராசிரியர்கள் மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த விழாவினை வணிகவியல் துறை பேராசிரியர்கள் ஒருங்கிணைத்து செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இக் கல்லூரியின் இந்த கல்வி ஆண்டிற்கான கல்லூரி மாணவிகளின் தலைவராக அகல்யா என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட
பல்வேறு பதவிகளுக்கு மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு ஆணையர் சரவணகுமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )